புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு : பொதுமக்கள் போலீசில் புகார்

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு : பொதுமக்கள் போலீசில் புகார்
X

குமாரபாளையம் அருகே சில நபர்கள் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்தமைக்கு பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர்.

குமாரபாளையம் அருகே சிலர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தமைக்கு பொதுமக்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு, சுபாஷ் நகர் பகுதியில் சில நபர்கள் அங்குள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஆக்கிரமிப்பு நபர்கள் ஆள் வைத்து மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுத்தனர்.

அப்பகுதி மக்கள் கூறியதாவது:

இதே இடத்தில் இரண்டு ஆண்டுகள் முன்பு இதே நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்தனர். இது குறித்து தாசில்தார், வி.ஏ.ஓ., சர்வேயர், தட்டான்குட்டை ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என அனைவரிடமும் புகார் மனு கொடுத்து, அளவீடு செய்து பார்த்ததில், அந்த இடம் நீர்வழி ஓடை புறம்போக்கு என்பது உறுதியானது. அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய அடியாட்களுடன் அப்பகுதி மக்களை மிரட்டி வருவதால் அனைவரும் அச்சத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. பல தொழில் நிறுவனங்கள் உள்ளன. அருகில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் வீடுகளில் வாடகைக்கு தங்கியுள்ளனர். புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய அடியாட்கள் கூட்டம் இந்த பகுதியை சுற்றி, சுற்றி வருவதால், மக்கள் நடமாட கூட அச்சம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களை கண்டிக்கா விட்டால், இதே ஒரு முன்மாதிரியாக ஆகிவிடும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture