தீபாவளியில் தாயை அனாதையாக விட்டு சென்ற மகன்!

தீபாவளியில் தாயை அனாதையாக   விட்டு சென்ற மகன்!
X

படவிளக்கம் :

தீபாவளி நாளில் குமாரபாளையத்தில் தாயை மகன் ஒருவன் அனாதையாக விட்டு சென்றதால், தாயை பஸ் ஸ்டாண்டிற்கு ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அழைத்து வந்து விட்டு சென்றார்.

தீபாவளி நாளில் குமாரபாளையத்தில் தாயை மகன் ஒருவன் அனாதையாக விட்டு சென்றான்.

தீபாவளி தினத்தில் தாயை அனாதையாக விட்டு சென்ற மகன்

தீபாவளி நாளில் குமாரபாளையத்தில் தாயை மகன் ஒருவன் அனாதையாக விட்டு சென்றான்.

நேற்று காலை 11:00 மணியளவில் ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் என்பவர், மூதாட்டி ஒருவரை குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் மிகவும் சிரமப்பட்டு இறக்கி விட்டார். அவரிடம் விசாரித்த போது அவர் கூறியதாவது:

சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் இந்த வயதான அம்மா, அழுதபடி நிற்க கூட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். கேட்டதற்கு மகன் விட்டு விட்டு சென்று விட்டான், என்றார். வெயிலில் இருந்த அவரை இங்கு அழைத்து வந்து விட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அந்த மூதாட்டி கூறியதாவது:

திருச்செங்கோடு சொந்த ஊர். மாதேஸ்வரன், ராணி என்ற மகன், மகள் உள்ளனர். கணவர் பல வருடம் முன்பு இறந்து விட்டார். உடல் நலமில்லாத என்னை பார்த்துக்கொள்ள மனமின்றி என்னை என மகன் பைபாஸ் சாலையில் விட்டுவிட்டு பொய் விட்டான்.

இவ்வாறு கூறி அழுதார்.

குமாரபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்கள் மற்றும் பல வெளியூர்களில் இருந்தும், இது போல் முதியவர்களை குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் கொண்டு வந்து விட்டு செல்கிறார்கள். பலர் அவ்வபோது வந்து பார்த்து செல்கிறார்கள். பலரை யாரும் கண்டு கொள்வதில்லை. பல முதியோர் தங்கள் இயற்கை உபாதை கழிக்க கூட எழுந்து செல்ல முடியாத நிலையில் இருப்பதால், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இது போல் இங்குள்ள ஆதரவற்றவர்களை அரசு சார்பில் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!