கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: தாசில்தார் தலைமையில் சமாதான பேச்சு
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் பள்ளிபாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடந்தது.
பள்ளிபாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், தாசில்தார் தலைமையில் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.
இது குறித்து தாசில்தார் சண்முகவேல் கூறுகையில், பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட நிலம், எலந்தகுட்டை பகுதியில் உள்ளது. இங்கு, பள்ளிபாளையத்தில் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சுத்திகரிப்பு செய்ய, பிளான்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் பலர் அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. கழிவுநீருடன், சாயக்கழிவு நீரும் சேர்ந்து வருவதால், இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதன் மூலம், இங்குள்ள நிலத்தடி நீர் மாசுபடும், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கு பிளாண்ட் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ.க்கு அறிக்கை அனுப்பப்பட்டு, மீண்டும் ஒரு தேதியில் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமாரபாளையம் புதிய தாசில்தார் அலுவலக கட்டுமான பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்ற நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் தாலுகா அலுவலகம் 2016, பிப். 27ல் நகராட்சி அண்ணா திருமண மண்டபத்தில் துவக்கப்பட்டது. புதிய தாலுக்கா அலுவலகம் கட்டுமான பணிகள் நகராட்சி அலுவலகம் அருகே பயணியர் மாளிகை வளாகத்தில் 2 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. நிறைவு கட்டத்தை எட்டிய நிலையில் விரைவில் தாலுக்கா அலுவலகம் திறக்க பல்வேறு தரப்பினர் சார்பில் கோரிக்கை எழுந்தது.
தற்போது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றது. ஆனால் இது இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் உள்ளது. இந்த கட்டிடம் அ.தி.மு.க.ஆட்சியில் தொடங்கப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சி நடப்பதால், இந்த கட்டிடத்தை யாரைக்கொண்டு திறந்து வைப்பது என புரியாமல் அதிகாரிகள் தவித்து வருகிறார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த கட்டிடம் திறக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu