மாற்றுத்திறனாளிக்கு கட்டி கொடுத்த வீடு திறப்பு

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் இன்ஸ்பெக்டர் ரவி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிவ், மாற்றுத்திறனாளிக்கு கட்டி கொடுத்த வீடு திறப்பு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு குமாரபாளையத்தில் நடந்தது.
நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிக்கு கட்டி கொடுத்த வீடு திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகியன மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் நடந்தது.
மாற்றுத்திறனாளி ஆனந்த் என்பவருக்கு சிமெண்ட் அட்டை போடப்பட்ட வீடு கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வீட்டை தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா திறந்து வைத்து, பயனாளியிடம் சாவியை வழங்கினார். 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனுடையோர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை காவல் ஆய்வாளர் ரவி வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர், செயலர்,பொருளர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான அடையாள அட்டைகளை, கோட்டைமேடு பகுதி கவுன்சிலர் தனசேகரன் வழங்கினார். இதில் அதிமுக ஒன்றிய செயலர் குமரேசன், வி.ஏ.ஒ.முருகன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.
குமாரபாளையத்தில் நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி சாலை விதிகள் பின்பற்றுதல் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணியை, சேர்மன் விஜய்கண்ணன், எஸ்.ஐ. மலர்விழி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
சேலம் சாலை, பெரியார் நகர், நாராயண நகர் உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக சென்ற பேரணி ராமக்கா மண்டபத்தில் நிறைவு பெற்றது. இங்கு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஒன்றிய தி.மு.க. செயலர் வெப்படை செல்வராஜ், குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா, உள்ளிட்ட பலர் பங்கேற்று தலா 20 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு பெட்டிக்கடைகள் இரு நபருக்கும், 55 ஆயிரம் மதிப்புள்ள வில் சேர் ஒரு நபருக்கும், 500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் 20 நபர்களுக்கும், மேலும் பலருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu