குமாரபாளையம் ஏரியில் மீன் வளர்க்கும் விவகாரம்: இருதரப்பினர் மோதலில் ஒருவர் கைது
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஏரியில் மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடிப்பதில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதல் வழக்கில் ஒரு நபரை போலீஸார் கைது செய்தனர்.
குமாரபாளையம் தட்டான் குட்டை, நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி உள்ளது. இதில் மீன் பிடிக்கும், மீன் வளர்க்கும் உரிமையை ஒரு தரப்பினர் எடுத்திருந்தனர். இந்நிலையில், விவசாய நில உரிமையாளர்கள், மீன் வளர்ப்பதால், ஏரி தண்ணீர் அசுத்தமாகி விவசாய நிலங்கள் வீணாகி வருகிறது. ஆகவே, இந்த ஏரியில் மீன் வளர்க்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இப்பிரச்னை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த மோதலில் இரு தரப்பினரும் கட்டை, இரும்பு பைப் ஆகியவற்றால் தாக்கி கொண்டதில் பலரும் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீதும் குமாரபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர். இந்த ஏரி பிரச்சனை மோதலில் தொடர்புடைய தட்டான்குட்டை ஊராட்சி, கொளிஞ்சான்காடு பகுதியை சேர்ந்த தேவராஜ்( 35,) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu