செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள்
படவிளக்கம் : குமாரபாளையத்தில் செங்குந்த சமுதாயம் சார்பில் அன்ன நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள்
குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை* வகிக்க, மாநில செயற்குழு உறுப்பினரும், நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவருமான .தங்கராஜ் முன்னிலை வகித்தார்.
கிளைச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு பள்ளிபாளையம் பிரிவிலிருந்து அமைதி ஊர்வலமாக புறப்பட்டு நகராட்சி அலுவலகம் வரை சென்றடைந்தது.
பின்பு நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசியதாவது:
செங்குந்தர் சமுதாயத்தைச் சேர்ந்த பேரறிஞர் அண்ணா அரசியல் வாழ்வில் தனக்கென தனி முத்திரை பதித்ததையும், தவிர்க்க முடியாத அரசியல் மாமேதையாக இருந்ததையும், இன்றளவும் அனைத்து அரசியல் கட்சிகளும் அண்ணாவை முன்னிறுத்தி தமது கட்சிகளை வளர்த்து வருகிறது. நமது செங்குந்த மகாஜன சங்கம் விரைவில் அரசியல் முன்னெடுப்பிற்கான நடவடிக்கைகள் எடுத்து நமது செங்குந்த சமுதாய மக்கள் வாழ்வில் மேலும் முன்னேற்றம் அடைய நம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில் தில்லையாடி வள்ளியம்மை மகளிர் பேரவை தலைவர் அறிவு கொடி, கிளைச் சங்க பொறுப்பாளர்கள் சித்தலிங்கம், கணேசன் வேலுச்சாமி, சண்முகம், இளங்கோ, மாரிமுத்து, ஆசிரியர்கள் சிவராமன், முனியப்பன் மற்றும் வெப்படை கிளைச் சங்கத் தலைவர் சேகர், செயலாளர் தங்கராஜ், குமாரபாளையம் நகர செங்குந்த கிளைச்சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu