நடராஜா கல்லூரியில் தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்க முகாம்

குமாரபாளையம் நடராஜா கல்லூரியில் தீயணைப்பு துறை சார்பில் நடந்த செயல்விளக்க முகாம்
செயல்முறை விளக்க முகாம்
குமாரபாளையம் நடராஜா கல்லூரியில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் நடந்தது.
குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கல்லூரி வளாகத்தில் தீயணைப்பு படையினர் சார்பில் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த செயல்முறை விளக்க முகாம், தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா ஆகியோர் தலைமையில் நடந்தது.
நிலைய அலுவலர் தண்டபாணி முன்னிலையில் நடைபெற்ற செயல் முறை விளக்க முகாமில், தீ விபத்து ஏற்பட்டால், அதிலிருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்பது எப்படி, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை மீட்பது எப்படி, கேஸ் சிலிண்டர் கையாளும் முறை, ஏரி, கிணறு ஆகிய நீர் நிலைகளில் மூழ்கிய நபரை மீட்பது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வோரை மீட்பது, உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தீயணைப்பு படையினரின் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள், மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர்.
தீயணைப்பு பணி ஆபத்து நிறைந்தது என்றாலும், சவாலுடன் எதிர்கொண்டு நாம் அனைவரும் பணியாற்றி வருகிறோம். தீயணைக்கும் பணியின் போது இறந்தவர்களின் பட்டியல் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதற்கு மேலும் நீடிக்க கூடாது என்பது என் விருப்பம். பொதுமக்களுக்கு சேவை செய்வோம். எச்சரிக்கையுடன் பணியாற்றுவோம் என தீயணைப்பு நிலைய அலுவலர் தண்டபாணி பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu