கூலி உயர்வு போராட்டம் குறித்து சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வு போராட்டம் குறித்து சி.பி.எம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் கூலி உயர்வு போராட்டம் குறித்து சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் கூலி உயர்வு போராட்டம் குறித்து சி.பி.எம். சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கூலி உயர்வு போராட்டம் குறித்து சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி பிப். 1 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள் ஆகியோருடன் இறுதி கட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை பிப். 17ல் நடைபெறும் என தாசில்தார் கூறியுள்ளார். இதனை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்க தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் தெருமுனை விளக்க கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சி.பி.எம் சார்பில் கூலி உயர்வு குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலர் சத்திவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் சக்திவேல் பேசியதாவது:

விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பல்வேறு போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளது.

பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் ஊரில் இல்லை என்று காரணம் கூறி, பேச்சுவார்த்தை தள்ளிக்கொண்டே போனது. பிப்.11ல் உடன்பாடு ஏற்படாததால், ஆத்திரமடைந்த விசைத்தறி தொழிலாளர்கள் தாலுக்கா அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து, கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்புத்தறி உரிமையாளர்களை கைது செய், என்று கண்டன கோஷமிட்டனர். நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் இருதரப்பினரிடம் பேசி, பிப். 13ல் இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்கப்படும் என தொழிலாளர்கள் மத்தியில் உறுதி கூறினார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் விஜய்கண்ணன் கலந்து பேசி பிரச்சனையை ஓரளவு தீர்வுக்கு கொண்டுவந்துள்ளார். இது பற்றி குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது:

விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள் ஆகியோருடன் இறுதி கட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை பிப். 17ல் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி விசைத்தறி தொழிலாளர்கள் தொழிற்சங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணி கூறியதாவது:

பிப்.17ல் இறுதி கட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதால் தொழிற்சங்கங்கள் சார்பில் சடையம்பாளையம் காந்திநகர், உழவர் சந்தை, ராஜம் தியேட்டர் அருகில், கே.ஓ.என்.தியேட்டர் அருகில், பாலிக்காடு, அம்மன் நகர் ஆகிய இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாகிகள் கந்தசாமி, அசோகன், கனியபாண்டியன், காளியப்பன், சரவணன், சண்முகம், மாதேஷ்,பெருமாள் உள்பட விசைத்தறி தொழிலாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil