குமாரபாளையம் கம்பன் நகரில் கட்டப்பட்ட ரேஷன் கடையை திறக்க கோரிக்கை

குமாரபாளையம், கம்பன் நகரில் கட்டப்பட்ட ரேஷன் கடையை திறக்க அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

குமாரபாளையம், கம்பன் நகரில் 12.85 லட்சம் ரூபாய் செலவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டது. இது கட்டி முடிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை.

இது குறித்து நகர தி.மு.க செயலாளர் செல்வத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது பற்றி அதிகாரிகள் வசம் கூறி தக்க நடவடிக்கை உடனடியாக எடுப்பதாக உறுதி அளித்தார். கட்டி முடித்து பலனில்லாமல் கிடக்கும் கட்டிடம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் இப்பகுதி பொதுமக்கள் உள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!