குமாரபாளையம் கிளை நூலகத்தில் புதிய வாசகர் வட்டம் துவக்கம்

குமாரபாளையம் கிளை நூலகத்தில் புதிய வாசகர் வட்டம் துவக்கம்
X

குமாரபாளையம் கிளை நூலகத்தில் நடைபெற்ற புதிய வாசகர் வட்ட துவக்க விழாவில் நூலகர் சுப்பிரமணியம் பேசினார்.

குமாரபாளையம் கிளை நூலகத்தில் புதிய வாசகர் வட்டம் அமைக்கப்பட்டது.

குமாரபாளையம் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் அமைக்கப்பட்டு தலைவராக விடியல் பிரகாஷ், .துணைத் தலைவராக சீனிவாசன், செயலாளராக நூலகர் சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நூலக வளர்ச்சி கருத்தில் கொண்டு வாசகர்களுக்கும், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஆசிரியர் சிவராமன், நூலக பணியாளர் மேனகா, பொதுநல ஆர்வலர்கள் உஷா,கோபாலகிருஷ்ணன், தீனா, சீனிவாச ராகவன், மற்றும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் வாசக வட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!