குமாரபாளையத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா: எம்.எல்.ஏ., தங்கமணி பங்கேற்பு

குமாரபாளையத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா:   எம்.எல்.ஏ., தங்கமணி பங்கேற்பு
X

குமாரபாளையம் கம்பன் நகர் பகுதியில் தமிழக முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பங்கேற்று ரிப்பன் வெட்டி ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

குமாரபாளையத்தில் புதிய ரேஷன் கடையை எம்.எல்.ஏ., தங்கமணி பங்கேற்று திறந்து வைத்தார்.

குமாரபாளையம் கம்பன் நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி சார்பில், ரூ.12.85 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நகர அ.தி.மு.க. செயலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. தமிழக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பங்கேற்று ரிப்பன் வெட்டி ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ., தங்கமணி, இந்த ரேஷன் கடை கட்டிடமானது தொகுதி நிதி மேம்பட்டு நிதி 12.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இதனை திறந்து வைக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு தராத காரணத்தால் நாங்களே இதனை திறந்து வைத்துள்ளோம். கேட்டால் எங்களை போகக்கூடாது என்று கூறியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் வெற்றிபெற்று மக்கள் பிரதிநிதியாக இருக்கிறேன். அதிகாரிகள் இந்த விழாவிற்கு வந்தால் மக்கள் குறைகள் கேட்டு அவர்களிடம் சொல்லி குறையை தீர்த்து வைக்க முடியும். உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ள முயற்சித்த போது தொடர்பு கொள்ள முடியவில்லை.

இது பற்றி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து, இது பற்றி விளக்கம் கேட்கிறேன். இதே நிலை தொடருமானால் சட்டமன்றத்தில் இது பற்றி பேசி, இதற்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. அம்மா ஆட்சியில் இது போல் சிறு சம்பவங்கள் கூட நடைபெறவில்லை. வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை அதிகாரிகள் புறக்கணித்தால் பொதுமக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்று தவறாக எண்ணியுள்ளனர். அது தவறான கருத்து என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார்களே, எதை நிறைவேற்றினார்கள்? மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்களா? டீசலுக்கு 4:00 ரூபாய் தள்ளுபடி செய்தார்களா? நீட் தேர்வை ரத்து செய்தார்களா? விவசாய கடன், நகைக்கடன், மகளிர் கடன், கல்விகடன் தள்ளுபடி செய்தார்களா? எதை செய்தார்கள்? நகைக்கடன் தள்ளுபடி செய்கிறோம் என்றார்கள். இப்போது குழு போட்டுள்ளோம். அவர்கள் ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள்.

நகை மதிப்பீட்டாளர்தான் நகையை ஆய்வு பரிசொதனை செய்ய வேண்டும். ஏதோ ஒரு சில வங்கிகளில் அதிகாரிகள் செய்த தவறுக்காக, அனைத்து வங்கியிலும் நகைக்கடன் தள்ளுபடி செய்வதை ஒத்தி வைத்துள்ளோம் என்பதை எப்படி ஏற்றுகொள்வது? நீட் தேர்வு வேண்டாம் என்றுதான் நாங்களும் சொல்லி வருகிறோம். ஒவ்வொரு முறை பிரதமரை சந்திக்க போகும் போதும் எதிர்க்கட்சி தலைவர் இந்த நீட் தேர்வு ரத்து குறித்து கோரிக்கை மனுவை கொடுத்துதான் வந்து கொண்டுள்ளார் என அவர் கூறினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ரத்தினவேலு, பகுதி அலுவலர் ரமேஷ், உதவி மேலாளர் சுரேஷ், கட்சி நிர்வாகிகள் வெங்கடாசலம், தனசேகரன், மாதேஸ்வரன், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்