புதிய ரேஷன் கார்டுகள் ஓரு சில நாட்களில் வினியோகம் செய்யப்படும்

புதிய ரேஷன் கார்டுகள் ஓரு சில நாட்களில் வினியோகம் செய்யப்படும்
X
குமாரபாளையம் தாலுகா அளவிலான புதிய ரேசன் கார்டுகள் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என டி.எஸ்.ஒ. தகவல் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் தாலுக்கா அளவிலான புதிய ரேசன் கார்டுகள் ஓரிரு நாட்களில் வினியோகம் செய்யப்படும் என டி.எஸ்.ஒ. தகவல் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் புதிய ரேசன் கார்டுகள் பெற விண்ணப்பம் செய்துள்ளனர். இது விண்ணப்பித்து நீண்ட நாட்களாக புதிய ரேசன் கார்டுகள் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பணிகள் துரிதப்படுதப்பட்டு விரைவில் விநியோகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் (டி.எஸ்.ஓ) வெங்கடேஸ்வேரன் கூறியதாவது: குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் புதிய ரேசன் கார்டு வேண்டி, விண்ணப்பம் செய்தவர்கள், விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்படும் போது, குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு மேல் எழுதி உள்ளனர். இவைகள் கணினியில் பதிவேற்றம் செய்யும் போது, குறிப்பிட வார்த்தைகளுக்கு மேல் ஏற்றுக்கொள்ளாது. அதனால் பதிவேற்றம் செய்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது. ஓரிரு நாட்களில் புதிய ரேசன் கார்டுகள் விண்ணப்பம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture