குமாரபாளையம் காவல்நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
குமாரபாளையம் புதிய இன்ஸ்பெக்டராக தவமணி மீண்டும் பொறுப்பேற்றார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி பணியிட மாறுதலில் தர்மபுரி மாவட்டம், தேன்கனிக்கோட்டைக்கு சென்றார். நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் இன்ஸ்பெக்டராக இருந்த ராமகிருஷ்ணன், குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.
தேர்தல் முடிந்த நிலையில் போலீஸ் அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். இதில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தவமணி, தேன்கனிக்கோட்டையிலிருந்து, குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக மீண்டும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக இருந்த ராமகிருஷ்ணன் நாமக்கல் மாவட்டம் வேலூர் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இன்ஸ்பெக்டர் தவமணிக்கு போலீசார் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இவர் குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக இருந்த போது, அரசு நிர்ணயித்த நேரத்தை விட அதிக நேரம் மது விற்பது, முன்னதாக விற்பது ஆகியவைகளுக்கு தடை விதித்து நடவடிக்கை மேற்கொண்டார் புகையிலைப் பொருட்கள் விற்பது அறிந்து தீவிர விசாரணை செய்து குடோனில் வைக்கப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை சிறையில் அடைத்தார். மளிகை கடை, பெட்டிக்கடை, அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு கஞ்சா விற்பனையை ஒழித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu