நாளை (12ம் தேதி) குமாரபாளையம் ராயல் இண்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வு

நாளை (12ம் தேதி) குமாரபாளையம் ராயல் இண்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வு
X

நீட் தேர்வு மாதிரி படம்.

நாளை (12ம் தேதி) குமாரபாளையம் ராயல் இண்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது.

நாளை தமிழகம் முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை என்டிஏ செய்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே ராயல் இண்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு நேரம் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. மாணவர்கள் வர வேண்டிய நேரம் காலை 11.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மட்டுமே. நீ ட் தேர்வு அமைப்பினர் அறிவுறுத்தப்பட்டதன்படி, விதிமுறைகள் பின்பற்றப்படும். தேவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் நுழைவு வாயிலில் தேர்வு நிர்வாகிகளால் செயல் படுத்தப்படும் சோதனை களுக்கு பின்னரே அனுமதிக்கப் படுவார்கள். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 840 மாணவர்கள் பங்கேற்கவுள்ளார்கள். அதிக டூவீலர்கள், கார்கள் வரவிருப்பதால், தனித்தனி பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு பள்ளியின் செல் எண்: 8428669996ல் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை பள்ளியின் தாளாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!