அரசு கலை கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம்

அரசு கலை  கல்லூரி சார்பில்  நாட்டு நலப்பணித் திட்டம் முகாம்
X

படவிளக்கம் : குமாரபாளையம்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடந்த நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்பு முகாமில் தாசில்தார் சண்முகவேலுவுக்கு நினைவுபரிசினை முதல்வர் ரேணுகா வழங்கினார்.

குமாரபாளையம்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்புமுகாம் துவங்கியது.

அரசு கலை கல்லூரி சார்பில் நாட்டுநலப்பணித்திட்டம் முகாம்

குமாரபாளையம்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்புமுகாம் துவங்கியது.

குமாரபாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் முதல்வர் ரேணுகா தலைமையில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் துவங்கியது. துவக்க விழாவில் தாசில்தார் சண்முகவேல் பங்கேற்று, போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினார். கிராமங்களின் முன்னேற்றம் குறித்து வி.ஏ.ஒ. முருகன் பேசினார். இதில் கோவில் வளாகம் தூய்மை செய்தல், வெள்ளையடித்தல், திருவள்ளுவர் நகர், நடராஜா நகர் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்துதல், அங்குள்ள மாணவ மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டி, பேச்சு, கட்டுரை போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் துறையின் சிறப்புக்கள் பற்றி எடுத்துரைத்தல், மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் என்பது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 50 மாணவ, மாணவியர் பங்கேற்கவுள்ளனர். இந்த முகாம் பிப், 23 வரை நடைபெறவுள்ளது. குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன், கிளை நூலக நூலகர் சுப்பிரமணியம், துணை தாசில்தார் மதன், பேராரிசியர்கள் ரகுபதி, ரமேஷ்குமார், சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் விஜயகுமார், பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings