குமாரபாளையம் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தேசிய அறிவியல் தினம்

குமாரபாளையம் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தேசிய அறிவியல் தினம்
X

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவையொட்டி மாணவ, மாணவியர் தங்கள் அறிவியல் படைப்புக்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.

குமாரபாளையம் அரசு கல்லூரிகள், அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் மற்றும் பொருளியல் மன்றத் தொடக்கவிழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார். வனவாசி அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் மகாலிங்கம் பங்கேற்று, உலக நல்வாழ்விற்கான அறிவியல் என்ற தலைப்பில் பேசினார். இதனையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்வேறு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பேராசிரியர்கள் சின்னப்பராஜ், வெங்கடேசன், ஹெலன், சரளா, தங்கவேல், தீபா, சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.

இதே போல் வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் தினம் தலைமை ஆசிரியர் (பொ) மாதேசு தலைமை வகித்தார். மாணவ, மாணவியர்கள் காற்றாலை மின்சாரம் தயாரித்தல், சூரிய வெப்பத்தின் மூலம் மின்சாரம் தயாரித்தல் ஆகிய படைப்புக்களை செய்து காட்டினர்.

குமாரபாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் முதல்வர் ரேணுகா தலைமையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்ததுடன், இணைய தளம் மூலம் தேசிய அளவிலான வினாடி வினா போட்டியில் மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture