குமாரபாளையம் நுழைவுப்பகுதியில் 'குமாரபாளையம்' பெயருடன் பெயர்பலகை வைக்க வேண்டும்

குமாரபாளையம் நுழைவுப்பகுதியில் குமாரபாளையம் பெயருடன் பெயர்பலகை வைக்க வேண்டும்
X

குமாரபாளையம் நுழைவுப்பகுதியில் குமாரபாளையம் பெயர் இல்லாத பெயர்பலகை .

குமாரபாளையம் நுழைவுப்பகுதியில் 'குமாரபாளையம்' ஊர் பெயருடன் பெயர்பலகை வைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம்:

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு, குமாரபாளையம் நுழைவுப்பகுதியில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதில் பவானி, இடைப்பாடி, கோபிசெட்டிபாளையம், மேட்டூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. தாலுக்கா அந்தஸ்து பெற்று தாலுக்கா அலுவலகம், நகராட்சி அலுவலகம், நில அளவை தாசில்தார் அலுவலகம், ஆர்.ஐ. அலுவலகம், அமானி, அக்ரஹார வி.ஏ.ஒ. அலுவலகங்கள், அரசு கல்வியியல் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்பட அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தில் 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், 200க்கும் மேற்பட்ட விசைத்தறி, கைத்தறி நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய சாயப்பட்டறைகள், 2 உயர் தொழில் நுட்ப பூங்காக்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குமாரபாளையம் நகரின் பெயர் அந்த பெயர் பலகையில் குறிப்பிடப்படவில்லை.

உலகின் பல நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் குமாரபாளையம் ஜவுளிகளை வாங்க வருகிறார்கள். குறிப்பிடப்படவேண்டிய ஊரின் பெயரை விட்டு விட்டு, சம்பந்தம் இல்லாமல் மற்ற ஊர்களின் பெயர்கள் இருப்பது குமாரபாளையம் பொதுமக்களை பெறும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. உடனே அந்த பெயர் பலகையில் குமாரபாளையம் பெயரையும் இடம் பெற செய்திட வேண்டும்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare