நாமக்கல் மாவட்ட ஐயப்ப சேவா சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

நாமக்கல் மாவட்ட ஐயப்ப சேவா சங்க   புதிய நிர்வாகிகள் தேர்வு
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

குமாரபாளையத்தில் நடந்த அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் பொதுக்குழு கூட்த்தில் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ஆண்டு தோறும் பொதுக்குழு கூட்டமும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு குமரபாளையத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவராக வக்கீல் பிரபு, மாவட்ட செயலராக ஜெகதீஸ், மாவட்ட பொருளராக செங்கோட்டையன், துணை தலைவர்கள் 6 பேர், துணை செயலர்கள் 7 பேர், மாவட்ட தளபதியாக பிரவீன் பிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் 23 பேர், கவுரவ தலைவர்கள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

சேவைத்திட்டங்கள் அதிகம் செய்தல், அதிகமாக புதிய கிளைகள் தொடங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு வலு சேர்த்தல், கண் சிகிச்சை, பல் சிகிச்சை, இருதய சிகிச்சை, ரத்ததான முகாம் உள்ளிட்ட முகாம்கள் அதிகம் அமைத்தல், கல்வி உதவித்தொகை வழங்கி ஏழை மாணவ, மாணவியர்களுக்கு உதவுதல், சபரிமலையில் சேவை செய்ய மாணவர்களை அதிகம் அனுப்பி வைப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story