பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்கும் இடங்களை பார்வையிட்ட ஆட்சியர்!
படவிளக்கம் : குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்கும் இடங்களை கலெக்டர் பார்வையிட்டார்.
பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்கும் இடங்களை பார்வையிட்ட கலெக்டர்
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்கும் இடங்களை கலெக்டர் பார்வையிட்டார்.
குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் வரும் சமயங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களை நகராட்சி பள்ளி மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைப்பது வழக்கம். இந்த இடங்களில் போதிய இட வசதி, மின்சார வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் உள்ளனவா? என மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, தகுதி உள்ள நபரா? என விசாரணை செய்ய உத்திரவிட்டார். நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, வி.ஏ.ஒ. முருகன், மக்கள் நீதி மய்யம் சித்ரா, உஷா, புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் நகராட்சி சார்பில் இடைப்பாடி சாலையில் ஜி.ஹெச். அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இது அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், கட்டிடங்கள் மிகவும் சேதமானது. இதனை புதுப்பிக்கும் பணி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 278.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மார்க்கெட் செயல்பட்டு வருவதால், பேருந்துகள் வந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மார்க்கெட் கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்தததுடன், இது குறித்து வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனை கண்ட மாவட்ட கலெக்டர் உமா, நேற்று குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு வந்து, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கட்டுமான பணி குறித்து உண்மை தன்மை கேட்டறிந்தார். அப்போது அங்கு வந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் பெண்கள், மார்க்கெட்டின் உள்ளே கழிப்பிடம் அமைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும், வியாபாரம் பாதிக்கும், எனவே அதனை அகற்ற வேண்டும் என்றனர். உங்களுக்காக அமைக்கப்பட்ட கழிப்பிடம் உள்ளே இருந்தால்தான் உங்களுக்கு பயன்படும். வெளியில் வைத்தால், பஸ் ஸ்டாண்ட்க்கு வரும் அனைவரும் பயன்படுத்தும் நிலை உருவாகும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu