குமாரபாளையத்தில் வளர்ச்சிப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குமாரபாளையத்தில் வளர்ச்சிப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  உமா -வுக்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பொன்னாடை அணிவித்து  வரவேற்றார்.

குமாரபாளையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார்

குமாரபாளையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமான பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நேரில் ஆய்வு செய்தார்.

முன்னதாக, குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வுக்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து வரவேற்பளித்தார்.

குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார். குமாரபாளையம் நகராட்சிக்கு சொந்தமான எடப்பாடி சாலையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021 – 2022 ன் கீழ், 278.24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தினசரி சந்தையினை மேம்படுத்தும் பணியினையும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022 – 2023 ன் கீழ், வாரச்சந்தை வளாகத்தில் 192.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டும் பணியினையும்,

தேசிய நகர்புற சுகாதார திட்டம் 2021 – 2022 ன் கீழ், மாரக்காள்காடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட் பட்ட பகுதியில் 25.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர் சுகாதார நல மையம் கட்டும் பணியினையும், புத்தர் தெரு நகராட்சி துவக்கப் பள்ளியில் 9.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மைய சமையல் கூடம் கட்டும் பணியினையும், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், 19.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முராசு குட்டையினை தூர் வாரி கரை அமைத்து, கம்பி வேலி அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சியில் உள்ள கடைகள், தினசரி சந்தை உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பை பயன்படுத்தும் கடைகள் மீது அபராதம் விதிக்க உத்தரவிட்டார். மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பையினை பயன்படுத்துவது அவசியம் குறித்து கடை உரிமையாளர் களிடம் ஆட்சியர் உமா எடுத்துரைத்தார். தொடர்ந்து நகராட்சி முழுவதும் துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் நகராட்சி பொறியாளருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் (பொ)ராஜேந்திரன், நகராட்சி பொறியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Tags

Next Story
ai in future agriculture