பாசம் ஆதரவற்றோர் மையம் பெயரில் மர்ம நபர்கள் தீபாவளி வசூல் வேட்டை!

பாசம் ஆதரவற்றோர் மையம் பெயரில் மர்ம நபர்கள் தீபாவளி வசூல் வேட்டை!
X

படவிளக்கம் : குமார், நிறுவனர், பாசம் ஆதரவற்றோர் மையம்.

குமாரபாளையத்தில் பாசம் ஆதரவற்றோர் மையம் பெயரில் மர்ம நபர்கள் தீபாவளி வசூல் வேட்டை நடந்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாசம் ஆதரவற்றோர் மையம் பெயரில் மர்ம நபர்கள் தீபாவளி வசூல் வேட்டை

குமாரபாளையத்தில் பாசம் ஆதரவற்றோர் மையம் பெயரில் மர்ம நபர்கள் தீபாவளி வசூல் வேட்டை நடந்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அருகே ராஜம் தியேட்டர் பின்புறம் ஓலப்பாளையம் பகுதியில் பாசம் ஆதரவற்றோர் மையம் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகிறார்கள். குமார் என்பவர் இந்த மையத்தை நிர்வகித்து வருகிறார். இந்த மையம் குறித்து ஆட்டோ மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் போலீசாருக்கு உதவிடும் வகையில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் அவசியம், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, நகராட்சி நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும், வரியினங்களை உரிய காலத்தில் செலுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு உதவிடுங்கள் என்பது உள்ளிட்ட பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வட்டமலை, சத்யா நகர் உள்ளிட்ட பகுதியில் பாசம் ஆதரவற்றோர் மையம் சார்பில் வருவதாக கூறி, மர்ம நபர்கள் சிலர் பொதுமக்களை ஏமாற்றி, நோட்டில் கையெழுத்து பெற்று, பணம் வசூல் செய்து வருகிறார்கள் என புகார் எழுந்தது. இது குறித்து வட்டமலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், பாசம் மைய நிர்வாகி குமாருக்கு போன் செய்து, பணம் வசூல் செய்து, மாலை ரசீது தருவதாக கூறி சென்றனர். இதுவரை ரசீது வரவில்லை என்று கூற, பண மோசடி கும்பல் குறித்த தகவல் வெளியானது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் போலீசார் இந்த மோசடி கும்பல் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். பாசம் ஆதரவற்றோர் மையத்திற்கு நன்கொடை, உணவு மற்றும் இதர உதவிகள் செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் போன் நெம்பர் : 98425 24038, 97518 14655.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!