பள்ளிபாளையம் அருகே ஆட்டோ ஓட்டுனர் மீது கொலை வெறித் தாக்குதல்: ஏழு பேர் கைது

பள்ளிபாளையம் அருகே ஆட்டோ ஓட்டுனர் மீது கொலை வெறித் தாக்குதல்: ஏழு பேர் கைது
X

பைல் படம்.

பள்ளிபாளையம் அருகே ஆட்டோ ஓட்டுனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஏழு பேர் கைது செய்யபட்டனர். தலை மறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ராஜா வீதி பகுதியில் வசிப்பவர் ஜலகண்டேஸ்வரன், (25). ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று மாலை தனது நண்பர்கள் மணிகண்டன், (24) லட்சுமணன், (25), ஆகியோருடன் பள்ளிபாளையம் அருகே உள்ள மண்கரடு என்னும் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில், மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு, எதிரே உள்ள காலி நிலத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அங்கு வந்த மணிகண்டனின் மைத்துனர் சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் தனது அக்கா மணிகண்டனுடன் வாழ விழாமல் தடுப்பது நீதான் என கூறி தகாத வார்த்தைகளில் பேசி கைகளால் தாக்கியுள்ளார். மேலும் சங்கர் மற்றும் அவருடைய நண்பர்கள் அருகில் இருந்த விவசாய நிலத்தில் கரும்புகளை பிடுங்கி சரமாரியாக ஜலகண்டேஸ்வரனை தாக்கியுள்ளனர்.இதனை அடுத்து பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜலகண்டீஸ்வரன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜலகண்டேஸ்வரனிடம் புகாரினை பெற்று அவரை தாக்கிய சங்கர், (28), மற்றும் அவரது நண்பர்களான விக்னேஷ், (26), கார்த்தி, (32), அரவிந்த், (33), கார்த்திகேயன், (23), சக்திவேல், (21), மற்றும் நாகராஜ், (21), ஆகிய ஏழு நபர்களை கைது செய்து, ஜலகண்டேஸ்வரனை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கியதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பள்ளிபாளையத்தைச் சேர்ந்த முன்னாள் குற்றவாளி ராம் பிரபு மற்றும் ஜீவா செட் பகுதியை சேர்ந்த யுவராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். அக்காவுடன் சேர்ந்து வாழ மறுக்கும் அக்கா கணவரின் நண்பரை கொலை வெறியுடன் தாக்கிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story