குமாரபாளையம் நகராட்சியில் 56 பொது கழிப்பிடங்கள் தூய்மை செய்யும் பணி

குமாரபாளையம் கம்பர் தெரு கழிவறைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் தூய்மை பணியாளர்.
குமாரபாளையம் :
குமாரபாளையம் கம்பன் நகர் பொதுக்கழிப்பிடத்தில் நேற்று முன்தினம் ஒரு ஆண் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கழிப்பிடத்தில் தினமும் தூய்மை பணி செய்யப்படுவதில்லை என புகார் எழுந்தது.
இது பற்றி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:
குமாரபாளையத்தில் 56 பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இவைகளை நகராட்சி தூய்மை பனியாயாளர்கள் தினமும் தண்ணீர் ஊற்றியும், லைசால் கரைசல், பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மை செய்தும் வருகிறார்கள். இவர்கள் தூய்மை பணி செய்யும் போது கழிவறையில் ஏதோ ஒன்று அல்லது இரண்டு அறைகளில் ஆட்கள் இருந்தால் அந்த கதவு மூடப்பட்டிருக்கும்.
அதனால் அந்த அறை தூய்மை செய்யப்படாமல் இருக்க வாய்ப்புண்டு. இனி ஆட்கள் வெளியில் வரும் வரை காத்திருந்து தூய்மை பணி மேற்கொள்ளப்படும். மேலும் தினமும் கழிப்பிடம் இரவில் பூட்டப்படும் போது கழிப்பிட அறைகளில் யாராவது இருக்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்திய பின் பூட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று முன்தினம் கம்பன் நகர் கழிப்பிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலம் 2 நாட்களாக கிடந்தது குறிப்பிடத்தக்கது. அந்த கழிவறை அடைக்கப்பட்டிருந்ததால் தூய்மை பணியாளர்கள் கழிவறைக்குள் யாரோ இருக்கிறார்கள் என்று எண்ணி சென்று இருக்கின்றனர். அதனால் இதைப்போன்ற தவறுகள் நடக்க கூடாது என்பதால் தூய்மை பணியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu