புதிய நியாய விலைக் கடை அமையும் இடம்: நகராட்சித் தலைவர் ஆய்வு
குமாரபாளையத்தில் புதிய நியாய விலைக் கடை அமையவுள்ள இடத்தை நகராட்சி தலைவர் பார்வையிட்டார்
குமாரபாளையம் நகராட்சி, திருவள்ளுவர் நகர் பகுதிக்குநமக்கு நாமே திட்டத்தில் புதிய நியாய விலை கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த இடத்தைதமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்
செல்வ விஜயராணி மற்றும் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பார்வையிட்டனர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் செயல்பட்டு வரும் நியாய விலை கடை மிகவும் பழுதடைந்துள்ளதால் அதனையும் நேரில் பார்வையிட்டு சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. நகர பொறுப்பு குழு உறுப்பினர் கந்தசாமி, நகர மன்ற உறுப்பினர்கள் அழகேசன், வேல்முருகன், பழனிச்சாமி மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் ரூபாய் 10.38 லட்சம் மதிப்பிலான காய்கறி,பாஸ்ட்புட் மற்றும் பூ விற்பனை செய்திட 13 விற்பனை வண்டிகள் வழங்கும் விழா நகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி மற்றும் அதற்கான உத்திரவு நகல் ஆகியவற்றை வழங்கினார்.
பொறியாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளர் ஜான்சிராணி, கவுன்சிலர்கள் ஜேம்ஸ், அழகேசன், வேல்முருகன், ராஜ், தி.மு.க. நிர்வாகிகள் சரவணன், ஜுல்பிகார் அலி, கந்தசாமி, கதிரேசன், விக்னேஷ், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம்:
குமாரபாளையத்தில் புதிய நியாய விலைக் கடை அமைக்க
நகராட்சி தலைவர் இடத்தை பார்வையிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu