நகர வளர்ச்சி பணிகள்: அமைச்சர் வேலுவிடம் கோரிக்கை மனு வழங்கிய நகராட்சி தலைவர்

குமாரபாளையம் நகர வளர்ச்சி பணிகள் சம்பந்தமாக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிடம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கோரிக்கை மனு கொடுத்தார்.
குமாரபாளையம் நகர வளர்ச்சி பணிகள் சம்பந்தமாக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிடம் நகராட்சி தலைவர் கோரிக்கை மனு கொடுத்தார்.
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவிடம் குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், குமாரபாளையம் நகர வளர்ச்சி பணிகள் சம்பந்தமாக கோரிக்கை மனு வழங்கினார்.
கோரிக்கை மனுக்களின் விவரம்:
1) நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆனங்கூர் ரோடு, பள்ளிபாளையம் ரோடு, எடப்பாடி ரோடு ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்கள் ( சாக்கடை கால்வாய்கள்) மிகவும் பழுதடைந்து மழைக்காலங் களில் மழை நீர் சாலைகளில் தேங்கி செல்வதால் மேற்கண்ட 3 சாலைகளில் உள்ள மழை நீர் வடிகால்களை புதுப்பித்து சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.
2) ஆனங்கூர் ரோடு கோட்டைமேடு பைபாஸ் நகராட்சி கழிப்பிடத்தின் அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தரைப்பாலம் மிகவும் தாழ்வாக உள்ளதால் கோம்பு பள்ள ஓடையில் அதிக தண்ணீர் செல்லும்போது சாலையின் மேலே தண்ணீர் செல்லக்கூடிய சூழல் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்திற்கும் மிகுந்த இடையூறாக இருப்பதால் அப்பகுதியில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.
3) அம்மன் நகர் பைபாஸ் ரோடு சர்வீஸ் சாலையில் (ஐயப்பன் கோவில் அருகில்) தடுப்புச் சுவர் இல்லாததால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது அதனால் பைபாஸ் சர்வீஸ் சாலையில் தடுப்பு சுவர் அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
4) குமாரபாளையத்தில் கட்டப்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணி சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக நகராட்சி கட்டிடத்தில் தொடர்ந்து இயங்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. எனவே வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணியை தொடர்ந்து செயல்படுத்தி புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu