குமாரபாளையம் அருகே தங்கை வீட்டிற்கு வந்தவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

குமாரபாளையம் அருகே தங்கை வீட்டிற்கு வந்தவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
X

குமாரபாளையம் காவல்நிலையம்.

குமாரபாளையம் அருகே தங்கை வீட்டிற்கு வந்தவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி, அக்கமாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 44,) தனியார் பஸ் ஓட்டுனர். இவர் பல்லக்காபாளையத்தில் உள்ள தனது தங்கை வீட்டின் முன்பு நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில் தனது பல்சர் கருப்பு நிற டூவீலரை நிறுத்தி விட்டு வெளியூர் சென்றார். நேற்று காலை 06:00 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தப்பட்டிருந்த வாகனம் காணவில்லை. மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்ததை அறிந்த சுதாகரன் குமாரபாளையம் போலீசில் இது பற்றி புகார் மனு கொடுத்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!