குமாரபாளையம் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.

குமாரபாளையம் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.
X

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திருச்செங்கோடு தொகுதி கொ.ம.தே.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன் பார்வையிட்டார்.

குமாரபாளையம் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கொ.ம.தே.க. எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் அருகே 400 கோடி மதிப்பில், திருச்செங்கோடு ஒன்றியங்கள், பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளான குப்பாண்டபாளையம், தட்டான்குட்டை உள்ளிட்ட பல ஊராட்சி பகுதிகள் பயனடையும் வகையில் புள்ளாக்கவுண்டன்பட்டி, பல்லக்காபாளையம் பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை திருச்செங்கோடு தொகுதி கொ.ம.தே. க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன் பார்வையிட்டார். தலைமை பொறியாளர் நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் வசம் பணிகள் குறித்து கேட்டறிந்து, விரைவில் பணிகளை நிறைவு செய்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறித்தினார்.

இதில் பள்ளிபாளையம் கொ.ம.தே. க. மேற்கு ஒன்றிய செயலர் வாசுதேவன், பொருளர் கதிரேசன், ஒன்றிய விவசாய அணி செயலர் விஜயகுமார், ஊராட்சி செயலர் வேலுச்சாமி, கொ.ம.தே. க. வடக்கு ஒன்றிய செயலர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!