11 வயது மகளை காணவில்லை தாய் பள்ளிபாளையம் போலீசில் புகார்

11 வயது மகளை காணவில்லை   தாய் பள்ளிபாளையம் போலீசில் புகார்
X

சிறுமி மாயம் (கார்ட்டூன் படம்) 

11வயது மகளை காணவில்லை என்று தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தில் மாயமான தனது 11 வயது மகளை கண்டுபிடித்து தருமாறு தாய் புகார் கொடுத்துள்ளார்.

பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னபொன்னு(30). அவரது கணவர் சுப்ரமணி(30). கணவன், மனைவி இருவரும் கூலி தொழிலாளர்கள். அவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் அமுதாவுக்கு வயது 11, ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரை, கடந்த, 12ம் தேதி முதல் காணவில்லை. அக்கம் பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்துவிட்டனர். ஆனால், அங்கும் அமுதாவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனாலும் அவர்களுக்கு மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால்,பள்ளிபாளையம் போலீசில் அவரது தாய் சின்னபொன்னு புகார் கொடுத்துள்ளார். வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!