மேட்டூர் கிழக்கு கரை முறை நீர் பாசன விவசாயிகள் சங்க 20வது அண்டு விழா
குமாரபாளையத்தில் நடந்த மேட்டூர் கிழக்கு கரை முறை நீர் பாசன விவசாயிகள் சங்க 20வது அண்டு விழாவில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் பேசினார்.
குமாரபாளையத்தில் மேட்டூர் கிழக்கு கரை முறை நீர் பாசன விவசாயிகள் சங்க 20வது அண்டு விழா தலைவர் கொமாரசாமி தலைமையில் நடைபெற்றது.த்
செயலர் அத்தியண்ணன் அறிக்கை வாசித்தார். வரவு, செலவு கணக்கு சமர்பிக்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் 2 மதகுகள் குடிமராமத்து பணிகள் செய்தமைக்காக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.
உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் பேசியதாவது:
வழக்கமாக கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடும் நாட்களுக்கு முன்பாகவே இந்த ஆண்டு திறக்கப்பட்டு விட்டது.
விவசாயிகள் உடனே தங்கள் நிலங்களில் பயிரிட்டு டிசம்பர் மாதத்திற்குள் மகசூல் பெறும் வகையில் பணியாற்றி பயன்பெற வேண்டுகிறேன்.
பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால்கள் அனைத்திலும் தண்ணீர் கடைமடை பகுதி வரை தண்ணீர் பாயும் வகையில் வாய்க்கால் பகுதி முழுதும் தூய்மைப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
சங்ககிரி துணை வேளாண்மை அலுவலர் முரளிதரன் பேசியதாவது:
நான் சேலம் மாவட்டம் தேவூர் பகுதி அலுவலர் என்றாலும், அருகே உள்ள குமாரபாளையம் பகுதி விவசாயிகள் கேட்டால் விதை நெல் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து தருகிறேன். விவசாயம் செழிக்க வேண்டும் என்பதுதான் இந்த துறையின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.
பொதுப்பணித்துறை துணை பொறியாளர் முருகேசன், நிர்வாகிகள் காந்திநாச்சிமுத்து, குருநாதன், புகழேந்தி, உள்பட விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu