மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் நீரினைபயன்படுத்துவோர் சங்க தேர்தல்

மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் நீரினைபயன்படுத்துவோர் சங்க தேர்தல்
X

மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் நீர் பாசனம் பயன்படுத்துவோர் சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல் குமாரபாளையத்தில் நடந்தது.

இது குறித்து உதவி தேர்தல் அலுவலர் குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது:

குமாரபாளையம் தாலுக்கா அளவிலான மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் நீர் பாசனம் பயன்படுத்துவோர் சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் நடந்தது. இதற்கான தேர்தல் அக். 7ல் குமாரபாளையம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் நடக்கவுள்ளது.

இந்த தேர்தலை திருச்செங்கோடு கோட்டாச்சியர் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்தி வைக்கவுள்ளார். இதில் எலந்தகுட்டை, கலியனூர், கலியனூர் அக்ரஹாரம், குமாரபாளையம் அமானி, குமாரபாளையம் அக்ரஹாரம், சமயசங்கிலி, சமயசங்கிலி அக்ரஹாரம், பள்ளிபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். 8 தலைவர் பதவிகளுக்கு 10 நபர்களும், 64 உறுப்பினர் பதவிகளுக்கு 70 நபர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த வேட்புமனுக்களுக்கான பரிசீலனை செப். 29ல் நடக்கவுள்ளது. அதே நாளில் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அக். 7ல் குமாரபாளையம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் காலை 7: மணி முதல் மாலை 2: மணி வரை தேர்தல் நடைபெறும். அதே நாளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீர்வளத்துறை உதவி பொறியாளர் வெங்கடாசலம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture