அரசு உதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு

அரசு உதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பில் நன்கொடையாக வழங்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவியை மாணாக்கர்கள் வழங்க தலைமை ஆசிரியை சுகந்தி பெற்றுக்கொண்டார்.

குமாரபாளையம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவ,மாணவியர் சந்திப்பு நடந்தது

குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவ,மாணவியர் சந்திப்பு நடந்தது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடந்தது. முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒவ்வொருவரும் தாங்கள் படித்த தருணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறுவனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

வசதி இல்லாத மாணவ, மாணவியர்களுக்கு உதவுதல், பள்ளிக்கு தேவையான அத்தியாவசி யமான உபகரணங்கள் வாங்கி தருவது, ஒவ்வொரு ஆண்டும் சங்க கூட்டம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு, புதிய மாணவ, மாணவியர்களுக்கு அரசு பள்ளியின் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைத்தல், அரசு தேர்வுக்கு தேவையான உதவிகளை புதிய மாணவ, மாணவியர்களுக்கு செய்தல் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகி லெவி பங்கேற்று, முன்னாள் மாணவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். ஆசிரியைகள் ஹெலன் பிரசெல்லா, ஜாய்ஸ் அருள்செல்வி, மெர்சிபா குளோரி, ஸ்டெல்லா, சித்ரா, ஜமுனா, ராணி, பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் இலவச சித்தா மற்றும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் காளியப்பன் நலம் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை டாக்டர் கீர்த்தனா பங்கேற்று, சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை குறித்து மாணவ, மாணவியரிடம் எடுத்துரைத்தார். பள்ளியில் உள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தேவையானவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags

Next Story
ai in future agriculture