புரட்டாசி எதிரொலி: குமாரபாளையத்தில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

புரட்டாசி எதிரொலி: குமாரபாளையத்தில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
X

வாடிக்கையாளர்களின்றி வெறிச்சோடியுள்ள குமாரபாளையம் பகுதி இறைச்சிக்கடைகள்.

புரட்டாசி மாதம் என்பதால், குமாரபாளையத்தில் உள்ள இறைச்சி கடைகள், இன்று வெறிச்சோடி இருந்தன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதங்களாக இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இறைச்சி கடை நடத்தி வந்தவர்கள், வாழ்வாதாரம் இல்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். அண்மையில், சில தளர்வுகளுடன் இறைச்சி கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

இந்நிலையில், புரட்டாசி மாதம் என்பதால், ஆட்டிறைச்சி, கோழி, மீன் இறைச்சி வாங்குவதற்கு பொதுமக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டவில்லை. இதனால், குமாரபாளையத்தில் இறைச்சி கடைகள் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டன. குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இறைச்சி வியாபாரிகள், விற்பனை மந்தமானதால் கவலையடைந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!