அரசுப் பள்ளியில் கணித மேதை ராமானுஜன் பிறந்த நாள் விழா

அரசுப் பள்ளியில் கணித மேதை ராமானுஜன்  பிறந்த நாள் விழா
X

குமாரபாளையம் அரசுப் பள்ளியில் தளிர்விடும் பாரதம் பொதுநல அமைப்பின் சார்பில், கணித மேதை ராமானுஜன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அரசுப் பள்ளியில் கணித மேதை ராமானுஜன் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

குமாரபாளையம் அரசுப் பள்ளியில் கணித மேதை ராமானுஜன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

2012ம் ஆண்டு ராமானுஜனின் பிறந்த நாளான டிச. 22ஐ தேசிய கணித நாளாக இந்திய அரசு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தேசிய கணித நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழுவின் சார்பில் கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள் விழா குமாரபாளையம் சின்னப்பநாயக்கன் பாளையம் நகராட்சி துவக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.தலைவர் சீனிவாசன், தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை வகித்தனர்.

விழாவில் செயலாளர் பிரபு பேசியதாவது:இருபதாம் நூற்றாண்டில் உலக அளவில் ஒப்பற்ற கணித மேதையாக திகழ்ந்த இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்தவர். பெர்னோலியன் எண்கள் பற்றிய அவரது சிறப்பு கட்டுரையை 1911 ஆம் வருடம் இந்திய கணித சங்கம் வெளியிட்டு பெருமைப்படுத்தியது. 1913 மே மாதத்தில் சென்னை பல்கலைக்கழகம் ராமானுஜருக்கு இரண்டு ஆண்டுகள் உதவி தொகை வழங்கியது.

1914-ல் ராமானுஜத்தின் பங்களிப்பை இணைந்து தொடங்குவதற்காக கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரிக்கு வரவழைத்தது. ஹார்டி ராமானுஜருடன் கூட்டணி முக்கியமான ஆய்வுகளுக்கு வழிவகுத்தது. ஹார்டி அவர்களுடைய கூட்டு அறிக்கையில் ராமானுஜன் அவர்கள் ப(n) சூத்திரத்தை (Asymptotic Formula for p(n)) என கொடுத்தார்.

ராமானுஜர் ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சார்ந்தவர். இவருக்கு ஆரம்பத்திலுருந்து உணவு பிரச்சனை இருந்தது. முதல் உலகப் போர் வெடித்தபோது உணவு பொருட்கள் கிடைக்காமல் தவித்தார்.மார்ச் 16, 1916 ஆம் ஆண்டில் ராமானுஜன் அவர்கள் அறிவியலில் ஆராய்ச்சிக்கான இளங்கலை பட்டத்தைக் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலம் பெற்றார். ராமானுஜத்தின் ஏழு ஆவணங்களைக் கொண்ட உயர் கலப்பு எண்களின் (Highly Composite Numbers) விளக்கவுரை இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.இவ்வாறு அவர் பேசினார். ராமனுஜம் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு கணிதம் சம்பந்தமான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஆசிரியை சரிதா, நிர்வாகிகள் சரண்யா, செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.




Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!