சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கிய மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்

சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கிய  மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்
X

பள்ளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யத்தாரின் சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பள்ளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யத்தாரின் சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பள்ளிபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில், மாவட்ட செயலர் காமராஜ் வழிகாட்டுதல் பேரில், மாவட்ட துணை செயலர் மகுடேஸ்வரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர செயலர் விக்னேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நகரில் உள்ள சேதமான சாலைகள், எரியாத மின் விளக்குகள், பழுதான குடிநீர் குழாய்கள், புதிதாக கட்ட வேண்டிய வடிகால்கள் உள்ளிட்ட விபரங்களை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனுவாக கொடுத்து நடவடிக்கை எடுக்க கோருதல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான வருமான வரி சான்று, இருப்பிட சான்று, வாரிசு சான்று, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் உள்ளிட்ட பல ஆவணங்கள் கிடைத்திட வழிகாட்டுதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சிறப்பு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மல்லிகா வழங்கினார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!