மகளிர் காவல் நிலையம் அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!

மகளிர் காவல் நிலையம் அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!
X
குமாரபாளையத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது

மகளிர் காவல் நிலையம் அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

குமாரபாளையத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

குமாரபாளையத்தில் 1000க்கும் மேற்பட்ட விசைத்தறி, கைத்தறி கூடங்கள் 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள், 50க்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் மில்கள்,50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன. இவைகளில் பாலியல் துன்புறுத்தல்கள், குடிபோதையில் கணவன் மனைவியிடம் தகராறு, நடைபயிற்சியில் சென்ற பெண்னிடம் அத்து மீறல், பெண்ணிடம் செயின் பறிப்பு, கட்டுமான நிறுவனத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை,பேருந்து நிலையத்தில் மாணவிகளை கிண்டல் செய்யும் ரவுடிகள்.மன உளைச்சலில் மாணவ மாணவிகள், இளம் பெண்கள் தற்கொலை, காவிரி ஆற்றில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் என பலதரப்பட்ட பிரச்சனைகள் குமாரபாளையம் தாலுகாவில் நடந்து கொண்டுள்ளது.

பெண்கள் குற்ற சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் தாலுக்கா அந்தஸ்து பெற்ற குமாரபாளையத்திற்குள் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். தற்போது பெண்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்றால் திருச்செங்கோடு பெண்கள் காவல் நிலையத்திற்கு போகச் சொல்கிறார்கள். இதனால் காலவிரயம், பொருள் விரயம் ஏற்படுகிறது.மேலும் வருமான இழப்பும் ஏற்படுகிறது.எனவே குமாரபாளையத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டுமாய் மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுமக்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!