மக்கள் நீதி மய்யத்தினர் துண்டு பிரசுரம் விநியோகம்

மக்கள் நீதி மய்யத்தினர் துண்டு பிரசுரம் விநியோகம்
X

படவிளக்கம் :

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யத்தினர் வாக்காளர் பெயர் திருத்த முகாம் குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யத்தினர் வாக்காளர் பெயர் திருத்த முகாம் குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.

மக்கள் நீதி மய்யத்தினர் துண்டு பிரசுரம் விநியோகம்

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யத்தினர் வாக்காளர் பெயர் திருத்த முகாம் குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.

வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், திருத்தம், செய்வதற்கான சிறப்பு முகாம் நவ. 18,19ற்கு பதிலாக, நவ. 25,26 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களிடையே இந்த தகவலை தெரிவிக்கும் வகையில், மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில் நடந்தது. நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் இந்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. நிர்வாகிகள் உஷா, விமலா உள்பட பலர் பங்கேற்றனர்.


குமாரபாளையத்தில் முதற்கட்ட வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த முகாம் நடந்தது. மேலும் நவ. 18,19 ஆகிய சனி, ஞாயிறுகளில், ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் ஆகியவை நடைபெறுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசு சார்பில் நவ. 25,26ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாட்களில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், பொதுமக்களுக்கு உதவிட கோரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் தாலுக்கா அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. குமாரபாளையம் விட்டலபுரி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமில் மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, உஷா, மல்லிகா, நகராட்சி பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலரும் பங்கேற்று, பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்தனர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் வாக்காளர் பெயர் திருத்தும், சேர்த்தல் முகாமில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்யுமாறு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!