தீபாவளி பட்டாசு வெடிக்க மக்கள் நீதி மய்யம் விழிப்புணர்வு பரப்புரை!

தீபாவளி பட்டாசு வெடிக்க மக்கள் நீதி மய்யம் விழிப்புணர்வு பரப்புரை!
X

படவிளக்கம் : குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பாதுகாப்பான பட்டாசு வைக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

தீபாவளி பட்டாசு வெடிக்க மக்கள் நீதி மய்யத்தினர் விழிப்புணர்வு பரப்புரை செய்தனர்.

தீபாவளி பட்டாசு வெடிக்க மக்கள் நீதி மய்யத்தினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

பசுமையான, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவோம் என மக்கள் நீதி மய்யத்தினர் மகளிர் அணி சார்பில் குமாரபாளையம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சித்ரா தலைமை வகித்தார். இது பற்றி சித்ரா கூறியதாவது:

குழந்தைகளே, பட்டாசு வெடிப்பதில் இருக்கும் ஆர்வத்தை விட கவனமாக இருக்க கற்றுக்கொள், பெற்றோர்களே, குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது அருகில் இருந்து கவனியுங்கள், சாலையில் பட்டாசு வெடிக்கும் போது, போக்குவரத்தை கவனித்து வழிப்போக்கருக்கு இடையூறு இல்லாமல் பட்டாசுகளை வைக்க வேண்டும். புஷ்வானம் விடும் போது முகத்தை அருகில் கொண்டு செல்லாதே, காலி செருப்பின்றி பட்டாசு வெடிக்காதே. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட செயலர் காமராஜ், நிர்வாகிகள் நந்தகுமார், உஷா, விமலா, மல்லிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் நகரின் மையப்பகுதியில் அஞ்சல் அலுவலகம் அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர், மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர், ஆகியோருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் உள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 17வது வார்டு தபால் நிலையம் மையப்பகுதியில்

ஜே கே கே ரோட்டில் 40 வருடகாலமாக செயல்பட்டு வந்த அஞ்சலகத்தின் கட்டிடம் பழுதடைந்து இருந்ததால் வேறு இடத்திற்கு மாற்றம் செய்தனர்.ஆனால் அந்த அஞ்சலகத்தை கோவை சேலம் நெடுஞ்சாலையில் வட்டமலை அருகில் உள்ள தனியார் கல்லூரிக்குள் செயல்பட்டு வந்தது.முதியோர்கள்,மாற்றுத்திறனாளிகள்,மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் நெடுஞ்சாலையை கடந்து தபால் நிலையத்திற்கு செல்வது உதவித்தொகை,

சேமிப்புத்தொகை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

மக்களின் நலன் கருதி தபால் நிலையத்தை குமாரபாளையம் மையப்பகுதிக்குள் கொண்டு வரவேண்டி மக்கள் நீதி மய்யம் சார்பாக நாமக்கல் கோட்ட அலுவலர் அவர்களிடம் நேரில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு தனியார் கல்லூரியில் செயல்பட்டு வந்த தபால் நிலையம் தற்போது 3கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிப்பாளையம் ரோடு காந்திநகரில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.

குமாரபாளையம் காவல்நிலையம் பின்புறம் ஜே கே கே ரோட்டில் செயல்பட்டு வந்த நகராட்சிக்கு சார்ந்த பழைய பத்திரப்பதிவு அலுவலகம் தற்போது காலி செய்யப்பட்டுள்ளது.அந்த கட்டிடத்தில் காந்திநகரில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்தை மையப்பகுதிக்குள் கொண்டு வந்தால் பொதுமக்களுக்கு உபயோகமாக இருக்கும்.ஆகையால் தாங்கள் அந்த கட்டிடத்தினை ஆய்வு செய்து தபால் நிலையம் இதில் செயல் படுவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!