25ம் தேதி மதுக்கடைகள், பார்கள் மூடல்

25ம் தேதி மதுக்கடைகள், பார்கள் மூடல்
X

டாஸ்மாக் மது கடை (மாதிரி படம்)

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் அன்றைய தினம் மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்கும் என்று நாமக்கல் கலெக்டர் அறிவித்துள்ளார்.

வருகின்ற 25ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் மதுபான சில்லரை விற்பனை கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்படவேண்டும். அந்த நாளில் அரசு உத்தரவை மீறி மது கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இந்த உத்தரவுப்படி குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள மதுபான கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்கும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்