பள்ளத்தில் கவிழ்ந்த லாரி பொக்லைன் மூலம் மீட்பு

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி பொக்லைன் மூலம் மீட்பு
X

படவிளக்கம் : குமாரபாளையம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த லாரி, பொக்லின் உதவியுடன் மீட்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த லாரி, பொக்லைன் உதவியுடன் மீட்கப்பட்டது.

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி மூலம் மீட்பு

குமாரபாளையம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த லாரி, பொக்லைன் உதவியுடன் மீட்கப்பட்டது.

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை பகுதியில் கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக சர்வீஸ் சாலைகள் அகலப்படுத்தும் பணி தற்போது நடந்து வரும் நிலையில், சாலையோரம் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. அவ்வழியே வந்த லாரி, திரும்பி செல்ல, பின்புறமாக செல்ல எதிர்பாராத விதமாக பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதனை பொக்லின் மூலம் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேம்பால பணிக்காக பிரதான சாலையில் வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்படவுள்ளதால், சர்வீஸ் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

குமாரபாளையம் அருகே மேம்பாலம் பணி போக்குவரத்து இடையூறு சமாளிக்க

பழைய நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன. வாகன போக்குவரத்து சர்வீஸ் சாலைகளில் திருப்பி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவியர் மிகவும் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்படும். இதனால் அதே பகுதியில் பழைய நெடுஞ்சாலை புதர்மண்டி கிடந்தது. அதனை சரி செய்து மக்கள் பயன்படும் வகையில் சமூக ஆர்வலர்களால் புனரமைக்கப்பட்டது. இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விழா தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா தலைமையில் நடந்தது. தி.மு.க. ஒன்றிய செயலர் நாச்சிமுத்து பங்கேற்று ரிப்பன் வெட்டி, இந்த பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். வார்டு உறுப்பினர் முனியப்பன், விஜயநகர் காலனி, சுபாஷ் நகர் பொதுமக்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. பொதுமக்கள் போராட்டத்தையடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது. அதே போல் அதிக மக்கள்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சாலையை கடக்கும் பகுதியாக

கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதி மாறியுள்ளது. தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான், கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் நிறைய உள்ளதால், இவைகளில் சேர மாணவ, மாணவியர் இந்த சாலையை கடந்து செல்லும் அத்தியாவசியம் ஏற்பட்டு வருகிறது. குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலை வழியாக அதிக வாகனங்கள் சென்று கொண்டுள்ளன. ஒருமுறை பொதுமக்கள் சாலையை கடக்க காத்திருந்தால் பாதி தூரம் கடக்க சுமார் 15 நிமிடமும், பாதி தூரத்தில் இருந்து மறுபக்கம் செல்வதானால் மேலும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகின்றது. இதனால் கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் போதிய போலீசார் நியமித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இந்த இடத்தின் அத்தியாவசியம் கருதி உடனே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் பணிகள் நடந்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!