/* */

ஊரடங்கு அறிவிப்பால் தவிக்கும் விசைத்தறி தொழிலாளர் குடும்பங்கள்

பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்கள் ஊரடங்கு அறிவிப்பால் வேலையின்றி வருமானத்துக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஊரடங்கு அறிவிப்பால்  தவிக்கும் விசைத்தறி தொழிலாளர் குடும்பங்கள்
X

ஊரடங்கு அறிவிப்பால் பள்ளிபாளையத்தில் ஓடாமல் கிடக்கும் தறிக்கூடம் 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2ம் அலை மிக வேகமாக பரவி வருவதால் அதை தடுக்கும் முயற்சியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் அதிகாலை 4.00 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். அதே நேரத்தில் விசைத்தறிகள் இயக்கக் கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வந்த ஏராளமான விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு இரண்டு வாரங்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த காலங்களில் முழு ஊரடங்கால் விசைத்தறி தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு தற்போது சீரடைந்து வந்த நிலையில் மீண்டும் தறி பட்டறைகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளதால் விசைத்தறி கூலி தொழிலாளர்கள் வருமானத்துக்கு வழியின்றி விழி பிதுங்கி உள்ளனர்.

மேலும் வர்த்தக வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் வேறு வேலை வாய்ப்பு இன்றி வருமானமின்றி வறுமையில் தவித்து வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு ஏதேனும் நிவாரணத் தொகை அல்லது ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...