குமாரபாளையம்: வாய்க்காலில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை

குமாரபாளையம்: வாய்க்காலில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை
X

தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், அருந்ததியர் தெரு பாலம் அருகே,  மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில், மழையால் சாய்ந்து விழுந்துள்ள மரம்.

குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையத்தில், வாய்க்காலில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், அருந்ததியர் தெரு பாலம் அருகே மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் செல்கிறது. அண்மையில் பெய்த கனமழையின்போது, மரம் ஒன்று சாய்ந்து, வாய்க்காலில் விழுந்தது.

இது, இதுவரை அகற்றப்படவில்லை. இதனால், தண்ணீரில் மிதந்து வரும் செடி கொடிகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் யாவும் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி இப்பகுதி பொதுமக்கள், பொதுப்பணித்துறையினருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

நாளுக்குநாள் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், வாய்க்காலில் சாய்ந்த மரத்தை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்