குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
X

குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய ஜாஜி சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை சமஸ்கிருத்தம் நுழைத்து திருத்தி உள்ளனர். இதன் ஷரத்துகள் மக்கள் விரோதமாக இருப்பதால், இதனை திரும்ப பெறக்கோரி, குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் சங்க செயலர் நடராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் துணை தலைவர் தீனதயாளன், இதே அமைப்பின் துணை செயலர் ஐயப்பன், குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்க பொருளர் நாகப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நீதி மன்ற பணிகளுக்க பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் நீதிமன்ற புறக்கணிப்பின் காரணமாக வாய்தா தேதி மட்டும் அறிந்து கொண்டு சென்றனர். காலை முதல் மாலை வரை பொதுமக்கள் கூட்டம் நிறைந்த நிலையில் காணப்படும் நீதிமன்ற வளாகம் நேற்று வழக்கறிஞர்கள் சங்கம சார்பில் நடந்த ஆர்பாட்டத்திற்கு பின் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags

Next Story
மனித நலன் முதல் வணிக வெற்றிவரை சிறப்பாக செயல்படும் AI!