நில முகவர் சங்க செயற்குழு கூட்டம்
குமாரபாளையத்தில் நடைபெற்ற தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகம் மற்றும் செயற்குழு கூட்டம்
குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். செயலாளர் சிவராமன் வரவேற்றார் இதில் ஆயுத பூஜை விழா நடத்துவது, புதிய சங்கப் பெயர் பலகை திறப்பு விழா நடத்துவது, உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்குவது ஆகிய முப்பெரும் விழா நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனை தொடர்ந்து சங்க நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
சங்க தலைவர் சின்னசாமி பேசியதாவது: :சங்க உறுப்பினர்கள் கருத்துக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்கள் வாழ்வாதாரத்தை உயரச் செய்வதே சங்கத்தின் முக்கிய நோக்கம்.இவ்வாறு அவர் பேசினார்.சங்க நிர்வாகிகள் முத்து, மணிகண்டன், பாண்டியன், பங்காரு, ,சுரேஷ் குமார், உட்பட மற்றும் பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் பல பணிகள் காரணமாக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு போதுமான இருக்கைகள் இல்லை, ஆகவே, பொதுமக்களுக்கு தேவையான இருக்கைகள் அமைக்க வேண்டும், ஆண்கள் மற்றும் பெண்கள் அங்கு கழிப்பிட வசதி இல்லாமல் தவிப்பதால், அங்கு பொதுமக்களுக்கு கழிப்பிடம் அமைக்க வேண்டும். மேலும் மின்விசிறி வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu