செல்வமாரியம்மன், அங்காளம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா

செல்வமாரியம்மன், அங்காளம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா
X

குமாரபாளையம் தட்டான்குட்டை செல்வமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் சிவாச்சாரியார் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினார்.

குமாரபாளையம் அருகே செல்வ மாரியம்மன் கோவில் மற்றும் அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

குமாரபாளையம் அருகே செல்வமாரியம்மன் கோவில் மற்றும் அங்காளம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை காலனி சக்தி விநாயகர், செல்வமாரியம்மன், மதுரை வீரன், முனியப்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கணபதி யாகத்துடன் துவங்கியது. பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள தாளங்கள் முழங்க, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

மாலையில் யாக சாலை பூஜைகள் துவங்கியது. நான்காம் கால யாக சாலை பூஜைக்கு பின், நேற்று காலை 9:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் அர்ச்சகர் பாலாஜி சிவம் பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் முன்னாள் அமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி, கல்வியாளர் ஜெயபிரகாஷ், தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

குமாரபாளையத்தில் சின்னப்பநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள, தாளங்கள் முழங்க, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மாலையில் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 5:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா செய்யப்பட்டது.



Tags

Next Story
ai in future agriculture