குமாரபாளையம் : வாக்கு எண்ணிக்கை ஆலோசனைக்கூட்டம்

குமாரபாளையம் : வாக்கு எண்ணிக்கை  ஆலோசனைக்கூட்டம்
X

குமாரபாளையம் மாதிரி படம் 

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை அன்று பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த கூட்டம், குமாரபாளையம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதவல்லி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் கூறியதாவது:

மே,2 ம் தேதி காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அது முடிந்தபின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவானவாக்குகள் எண்ணிக்கை தொடங்கும் என்றார். மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளருடன் எத்தனை பேர் வரலாம், அங்கு என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்பது குறித்து விளக்கமாக பேசப்பட்டது. இந்த கூட்டத்தில் தாசில்தார் தங்கம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ், ஓ.ஏ.பி. தாசில்தார் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!