அரசு பள்ளி மாணாக்கர்களை புத்தக திருவிழாவிற்கு அழைத்து சென்ற விடியல் ஆரம்பம்

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் அமைப்பினர் அரசு பள்ளி மாணாக்கர்களை ஈரோடு புத்தக திருவிழாவிற்கு அழைத்து சென்றனர்.
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் அமைப்பினர் அரசு பள்ளி மாணாக்கர்களை புத்தக திருவிழாவிற்கு அழைத்து சென்று வியப்பில் ஆழ்த்தினர்.
குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரை, விடியல் ஆரம்பம் அமைப்பாளர் அமைப்பாளர் மற்றும் இல்லம் தேடிக் கல்வி நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமையில் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுத்து புத்தகக் கண்காட்சியின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். முன்னதாக இவர்கள் புறப்பட்ட வாகனத்தை பஞ்சாலை சண்முகம் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார்.
எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ரவீந்திரன், மாணாக்கர்கள் ஈரோடு செல்ல இலவச பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்தார். அரசு பள்ளி மாணாக்கர்களிடம் ஈரோடு புத்தக திருவிழா அமைப்பாளர் ஸ்டாலின் குணசேகரன், புத்தகங்கள் வாசிப்பு அத்தியாவசியம் குறித்து எடுத்துரைத்தார். தலைமை ஆசிரியை சுகந்தி, ஆசிரியர்கள் நவநீதகிருஷ்ணன், ஹெலன், ஜமுனா ராணி, சித்ரா உள்பட பலர் உடனிருந்தனர்.
நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பாக குமாரபாளையத்தில்உலகப் புத்தக தினம் விடியல் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.வீதி வகுப்பறை ஏற்படுத்தி மாணவ மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வாசிப்பு திறன் ஏற்படுத்த, புத்தகங்களில் இருந்து கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
குமாரபாளையம் பகுதிகளில் 10 இடங்களில் வாசிப்பு மையம் நடைபெற்றது. நன்றாக கதை சொன்னவர்களுக்கு விடியல் பிரகாஷ், பரிசாக புத்தகங்களை வழங்கினார்கள். புத்தகங்களின் அருமைகள் பற்றியும், வாசிப்பை பற்றியும் மாணவ மாணவிகள் பேசினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu