வட்டமலை பஸ் ஸ்டாப்பில் எல்லா பஸ்களும் நிறுத்திச்செல்ல பயணிகள் கோரிக்கை

வட்டமலை பஸ் ஸ்டாப்பில் எல்லா பஸ்களும் நிறுத்திச்செல்ல  பயணிகள் கோரிக்கை
X

பஸ் நிறுத்தம் (கார்ட்டூன் படம்)

வட்டமலை பஸ் ஸ்டாப்பில் அனைத்து பஸ்களும் நிறுத்தி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட்டமலை பஸ் ஸ்டாப்பில் எல்லா பஸ்களும் நிறுத்திச் செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், வட்டமலை பகுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிறைந்த பகுதி. பல்வேறு தொழில் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அதனால், வட்டமலை பகுதிக்கு தினமும் மாணவர்கள் மற்றும் வேலை செய்வோர் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

ஆனால், வட்டமலை பஸ் ஸ்டாப்பில் ஒரு சில பஸ்கள் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. டவுன் பஸ்கள் மற்றும் ஒருசில தனியார் பஸ்கள் நிறுத்தி செல்கிறார்கள். தூர இடங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. வட்டமலை முக்கிய ஸ்டாப் என்பதால் இங்கு எல்லா பஸ்களும் நிறுத்திச் செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது இப்பகுதியில் படிக்கும் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் வேலைக்கு வருவோருக்கும் பயனுள்ளதாக அமையும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!