குமாரபாளையம் இன்றைய (13ம் தேதி) கிரைம் செய்திகள்

குமாரபாளையம் இன்றைய (13ம் தேதி) கிரைம் செய்திகள்
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் முன்விரோதம் மற்றும் விபத்துக்களில் இருவர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.

குமாரபாளையத்தில் இரும்பு பைப்பால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சத்யா நகரில் வசிப்பவர் முருகன், 22. கூலித்தொழிலாளி. இவரும் மனோஜ், 24, என்பவரும் நண்பர்கள். மனோஜ் என்பவருக்கும், அவருடன் கூலி வேலை செய்யும் சரவணன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு 07:30 மணிக்கு முருகன் வீட்டிற்கு வந்த சரவணன், ரஞ்சித் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் மனோஜ் எங்கே இருக்கிறான்? என கேட்டுள்ளனர். அதற்கு முருகனை நான்கு பேரும் கையாலும், இரும்பு பைப்பாலும் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த முருகன் குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி ஒருவர் படுகாயம்

சேலம் மாவட்டம், கொங்கனாபுரத்தை சேர்ந்தவர் மாதையன், 50. கூலி தொழிலாளி. நேற்றுமுன்தினம் குமாரபாளையம் அருகே சீராம்பாளையத்தில் வசிக்கும் தனது தங்கையின் குழந்தையை பார்க்க வந்தார்.

ஊருக்கு செல்வதற்காக சீராம்பாளையம் பஸ் நிறுத்தம் செல்ல இரவு 08:00 மணிக்கு சாலையை நடந்து கடக்கும் போது, அவ்வழியே வந்த யமஹா டூவீலர் மோதியதில் படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக ஈரோடு ஜி.ஹெச்.இல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், டூவீலர் ஓட்டுநர் கலியனூரைச் சேர்ந்த சதீஸ், 32, என்பவரை கைது செய்தனர்.

லாரி மோதி பூ வியாபாரி படுகாயம்

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி, 67. பூ வியாபாரி. இவர் நேற்று முன்தினம் காலை 09:45 மணியளவில் சைக்கிளில் சொந்த வேலையாக குமாரபாளையம் சென்றார்.

ராஜம் தியேட்டர் அருகே உள்ள பாலம் பகுதியில் வந்த போது, அதே திசையில் வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயடைந்தார். இவர் ஈரோடு ஜி.ஹெச்.ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், லாரி ஓட்டுனர் குமாரபாளையத்தை சேர்ந்த வடிவேல், 42, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future