சின்னப்பநாயக்கன்பாளையம் சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா

குமாரபாளையத்தில் சின்னப்பநாயக்கன்பாளையம் சாலையின் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
குமாரபாளையத்தில் சின்னப்பநாயக்கன்பாளையம் சாலை பள்ளம் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் இடைப்பாடி சாலை மிக முக்கிய சாலையாகும். பஸ் ஸ்டாண்ட், ஜி.ஹெச், காவேரி பாலம், உழவர் சந்தை, நகராட்சி பூங்கா ஆகியன இந்த சாலையில் உள்ளன. சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள், கைத்தறி கூடங்கள், மற்றும் சாயப்பட்டறைகள் உள்ளன. இவைகளில் பணியாற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர்.
மேலும் எடப்பாடி, தேவூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயில இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர்.
ஏராளமான பள்ளி கல்லூரி வாகனங்கள், திருப்பூர், கோவை, ஈரோடு, வெப்படை உள்ளிட்ட ஊர்களிலிருந்து தனியார் நூற்பாலை வாகனங்கள் இந்த சாலை வழியாக வந்து செல்கின்றன. இந்த சாலையில் உழவர் சந்தை அருகே, சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதில் ஆழம் தெரியாமல் பலரும் வாகனத்தில் சென்று, விழுந்து பலத்த காயமடைந்து வருகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த சாலை பள்ளத்தை சரி செய்து விபத்து அபாயத்தை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu