நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து நீர் வெளியேறி வீணானது

நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து  நீர் வெளியேறி வீணானது
X

குமாரபாளையத்தில் நகராட்சி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக பீறிட்டு வெளியேறியது.

குமாரபாளையத்தில் நகராட்சி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வீணாக வெளியேறியது

குமாரபாளையத்தில் நகராட்சி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக பீறிட்டு வெளியேறியதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் சாலை, கோம்பு பள்ளம் பாலம் பகுதியில் நகராட்சி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியே பீறிட்டது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு குழாய் உடைப்பை சரி செய்து, தண்ணீர் வீணாவதை தடுத்து நிறுத்தினர். குறுகிய நேரத்தில் குழாய் உடைப்பை சரி செய்த நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி மற்றும் மாஸ் கிளீனிங் முகாம் நடந்தது.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை எனும் பெயரில் அரசு வழிகாட்டுதல் படி விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கியது. ஆணையாளர் சரவணன் தலைமை வகிக்க, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இதில் அரசு கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று, விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறும் சென்றனர்.

பல முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி, மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்பட கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்றனர். காவிரி ஆற்றங் கரையோரம் மாஸ் கிளீன் செய்யப்பட்டது. சுகாதார பணியாளர்கள் பெருமளவில் பங்கேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story